பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

எல்லாம் தமிழ்


நாஅல்வேத நெறிதிரியினும் .
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலீஇயரோ அத்தை, அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே!

(மண் அணுச் செறிந்த நிலமும், அந்த நிலத்திற்கு மேலே உயர்ந்த வானமும், அந்த வானத்தைத் தடவி வரும் காற்றும், அந்தக் காற்ருேடு சேர்ந்த தீயும், தீயை அவிக்கும் நீரும் என்ற ஐந்து வகையான பெரிய பூதங்களது இயல்பைப்போல, பகைவர் தவறு செய்தால் அதைப் பொறுத்தலும், அளவுக்கு மேற்போனால் தண்டிக்கச் செய்யும் ஆராய்ச்சியின் விரிவும், அவர்களை அழிப்பதற்கேற்ற திடமும் படைப் பலமும், அவற்றைக்கொண்டு அவர்களை அழித்தலும், அவர்கள் வந்து பணிந்தால் இரங்கிக் காட்டும் கருணையும் உடையவனே! உனக்குரிய கடலிலே உதித்த சூரியன் உனக்குரிய கடலிலே குளிக்கும் எல்லையையும், புதிய புதிய விளைவையுடைய ஊர்களையும் பெற்ற நல்ல நாட்டுக்கு வேந்தே! வானத்தையே புகழுக்கு வரம்பாக உடையவன் நீ போலும், பெருமானே! அசைகின்ற கவரியை அணிந்த குதிரையையுடைய பஞ்சபாண்டவருடனே பகைத்து, பொன்னலாகிய போர்ப் பூவாகிய தும்பையை அணிந்து துரியோதனன் முதலிய நூறு பேரும் பொருது போர்க்களத்தில் அழியும் வரையில், பெருஞ் சோறாகிய மிக்க உணவை இரண்டு படைகளுக்கும் கணக்கில்லாமல் வழங்கினவனே! பால் புளித்துப் போனாலும், நான்கு வேதத்தின் வழியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/34&oldid=1529074" இலிருந்து மீள்விக்கப்பட்டது