பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

எல்லாம் தமிழ்


தன்றி, தமக்கென்று அதைப் பயன்படுத்திக் கொள்வதில்லையே! இப்படி ஒரு பெரியவர் பாராட்டினர்.

"பரிசிலருக்கு வழங்குவது கிடக்கட்டும். எல்லோரும் வழங்குவார்கள். ஆனால், வரிசை அறிந்து வழங்கும் பெருமை இருக்கிறதே, அதைச் சொல்லுங்கள். பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கும் பண்பைப் பாராட்டுங்கள்" என்று எழுச்சியோடு பேசினர் ஒரு புலவர்.

அதுவரையில் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த காரிகிழார் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தார். அவர் ஏதோ சொல்லப் போகிறாரென்று அருகில் உள்ளவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆண்டில் முதிர்ந்த சான்றோர் ஒருவர், "காரிகிழார் ஒன்றும் பேச வில்லையே! ஏதாவது சொல்லக்கூடுமென்று எதிர்பார்ப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் பல பேர் இருக்கிறார்கள்' என்றார்,

காரிகிழார் பேசத் தொடங்கினர்.

3

"நம்முடைய சக்கரவர்த்தியைப் பற்றி இவ்வளவு அறிஞர்கள் பேசிய பிறகு நான் என்ன சொல்லப் போகிறேன் ! அப்படி ஏதாவது சொன்னுலும், என் மடமையை வெளிப்படுத்திக் கொண்டதாக முடியுமே யன்றி, மன்னர் பெருமானது பெருமையை வெளிப்படுத்தியதாகாது. ஆனாலும், தோன்றியதைச் சொல்ல ஆசைப்படுகிறேன்."

இந்த முன்னுரையைக் கேட்ட புலவர்கள், 'காரிகிழார் எதற்காக இந்த அவையடக்கம் கூறவேண்டும்?' என்று நினைத்தார்கள். காரிகிழார் பேசலானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/46&oldid=1529183" இலிருந்து மீள்விக்கப்பட்டது