பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

41

 னும் முழுமையும் சொல்லவில்லையே! அதற்குள் உங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டீர்களே!" என்றார்.

"இன்னும் வேறு இருக்கிறதா ?" என்று அந்தப் பெரியவர் கோபத்தோடு கேட்டார்.

"பொறுங்கள்; சற்றுப் பொறுங்கள், மடங்காத குடை மடங்குக என்று பின்னும் வாழ்த்துகிறேன். இகழவில்லை; வாழ்த்துகிறேன். வணங்கா முடி வணங்குக என்று வாழ்த்துகிறேன். வாடாத மாலை வாடுக என்று பரவுகிறேன். அடங்காத கோபம் அடங்குக என்று வாழ்த்துகிறேன்" என்று அவர் சொல்லும் போது யாவரும் பெரிய குழப்பத்தை அடைந்தனர். புலவர்கள் மாத்திரம், "ஏதோ அற்புதம் விளைவிக்கப் போகிறார் இவர்” என்று உறுதியாக நம்பினர். அவர்களிற் சிலர், "புலவர் பெருமான் இனியும் அவையினரை மயக்கத்தில் ஆழ்த்தவேண்டாம். தெளிய வைக்கவேண்டும்" என்று வேண்டிக்கொண்டனர்.

4

காரிகிழார் ஒரு முறை சுற்றிலும் பார்த்தார். எல்லோரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். மன்னன் ஆவலை வெளிப்படையாகக் காட்டவில்லையே ஒழிய, எல்லோரையும்விட அதிக வேகம் அவனுக்குத்தான் இருந்தது. புலவர் பேசத் தொடங்கினர்.

"எல்லோருக்கும் படபடப்பை உண்டாக்கிவிட்ட என் செயலைப் பொறுத்தருள வேண்டும். நான் சொன்னவையெல்லாம் மன்னர் பிரானுடைய சீரிய குணங்களைப் புலப்படுத்துவனவே யன்றி வேறல்ல. எம்பெருமானுடைய சிவ பக்தியை நீங்கள் நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/49&oldid=1529291" இலிருந்து மீள்விக்கப்பட்டது