பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலக்கமும் தெளிவும்

43

 புலவரைக் குறைகூறிய பெரியவர் அயர்ந்து யோய்விட்டார். "தைரியம் இல்லை, தைரியம் இல்லை, தைரியம் இல்லை. உம்முடைய புலமைத் திறத்துக்கு முன் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம் ?' என்று படபடப்புடன் சொன்னர் அவர்.

“நம் மன்னர் மன்னரது வெகுளி அடங்கட்டும் என்றேன். இவருடைய கோபம் எங்கேயும் செல்லும். ஓரிடத்தில் மாத்திரம் செல்லாது. வாலிழை மட மங்கையர் கோபிக்கும்போது இவரும் சினந்து பயன் இல்லை. அவர் முகத்திலே சிவப்பேறினுல் இவர் கோபம் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும். இதுதான் இன்ப இயல் காதல் வாழ்வு. இது நம் மன்னரிடம் வாய்ப்பதாக என்று வாழ்த்துகிறேன். நீங்களும், சேர்ந்து வாழ்த்துங்கள் " என்று கூறி முடித்தார் புலவர்.

எல்லோரும் மகிழ்ச்சியினால் ஆரவாரித்தனர். கடைசியில் புலவர் இன்ப இயலைக் கூறியபோது மன்னன் உள்ளம் குளிர்ந்தான். காரிகிழார் தம் சாமர்த்தியத்தால் சபையை முதலில் ஒரு கலக்குக் கலக்கினவர், பிறகு தெளிய வைத்துவிட்டார். வியப்பும் ஆனந்தமும் துளும்ப அந்தத் தெளிவு ஏற்பட்டது.

[புறநானூறு, 6-ஆம் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதியது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/51&oldid=1529293" இலிருந்து மீள்விக்கப்பட்டது