பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரும் நீரும்

45

 உண்மை. தக்க சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாது" என்று எண்ணிய வேற்று அரசர் சிலர் அவனுடைய கருத்தைப் பாராட்டினர்கள் ; தாங்களும் அவனுடன் போருக்கு எழுவதாக உறுதி மொழியும் கூறிஞர்கள்.

அவர்கள் படைகளைச் சேர்த்தார்கள். போருக்கும் எழுந்தனர். நெடுஞ்செழியன் இளையவன்தான். ஆனாலும் வீரத்திற் சிறந்த பேரரசர் பரம்பரையிலே தோன்றியவன். குட்டியானுலும் பாம்பு பம்புதானே ?

பகையரசர் கூடிப் பொர வருவதைக் கேள்வியுற்று அவன் சீறினான். "ஓஹோ இவர்கள் என்னை இளம் பிராயத்தை உடையவனென்று எண்ணி விட்டார்களோ ? இவர்களை அடியோடு ஒழித்துவிடாமல் வேறுகாரியம் பார்ப்பதில்லை " என்று உறுதி பூண்டான்.

ஒற்றன் ஒருவன் வந்தான்; “அரசே, சேர நாட்டிலும் மற்ற இடங்களிலும் இந்த நாட்டுப் பெருமை தெரியாமல் பலர் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். 'இந்த அரசனுடைய நாட்டின் பெருமையைப் பெரிதாக உயர்த்திக் கூறுபவர்களைப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது. அதைக் கண்டு நாம் ஏமாந்து போக மாட்டோம். சின்னஞ் சிறு பிள்ளையாகிய அரசனுக்கு என்ன தெரியப் போகிறது ? என்று பேசிக்கொள்கிறார்கள் " என்றான்.

அரசன் சற்று மனம் உளைந்தான். ' அவர்களுடைய படைகள் எத்தகையவை?' என்று ஒற்றனைக் கேட்டான்.

யானை, தேர், குதிரை, வீரர் என்னும் நால் வகைப் படைகளையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/53&oldid=1529296" இலிருந்து மீள்விக்கப்பட்டது