பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

எல்லாம் தமிழ்


போருக்கு வேண்டியவற்றையெல்லாம் செய்யலாயினர்.

2

போர் மூண்டுவிட்டது. அரசனே நேரில் சென்று போரிடத் தொடங்கினான். " இத்தனை சிறுபிள்ளை போர்க்களத்துக்குப் போயிருக்கிருனே !" என்று அச்சமும் வியப்பும் கொண்டனர் மக்கள்.

"நேற்று வரையில் கிண்கிணி கட்டியிருந்த இளங்கால் அது; இன்று போர் வந்ததென்று அதில் வீரக் கழலைக் கட்டிக்கொண்டான். முதல் முறையாகக் குடுமி களைந்த விழா சில நாட்களுக்கு முன்தான் நடந்தது. அந்தத் தலையில் குலத்துக்குரிய அடையாளமாகிய வேம்பையும் போர்ப் பூவாகிய உழிஞையையும் அணிந்து கொண்டான். சிறு வளைகளை அணிந்திருந்த கை, இப்போது வில்லைப் பற்றிக்கொண்டது. சிங்கக்குட்டி தாவுவதுபோலத் தேரில் ஏறி நிற்கிறானே; இப்படியும் வீரத் திருக்குழந்தை உலகத்தில் உண்டா ? அவன் மாலை வாழட்டும் அவன் பெருமை வாழட்டும் !" என்று புலவர்கள் வாழ்த்தினர்கள்.

போரில் பகைவராக வந்தவர் ஒருவர் இருவர் அல்லர். சேரனும் சோழனும் அவர்களுடன் ஐந்து சிற்றரசர்களும் சேர்ந்துகொண்டனர். தலையாலங்கானம் என்ற இடத்தில் போர் மிகக் கடுமையாக நடந்தது. இரண்டு பக்கத்திலும் படைப் பலம் மிகுதியாகவே இருந்தது.

இடைக்குன்றுார் கிழார் என்ற புலவர் இதைக் கேள்வியுற்ருர், தலையாலங்கானத்துக்கும் சென்று பார்த்து வந்தார். பாண்டிய மன்னனுடைய வீரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/56&oldid=1529388" இலிருந்து மீள்விக்கப்பட்டது