பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயின் பிரார்த்தனை

 இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அவன் மனித இயல்புடையவன் தானே ? மனிதர்களுக்குள்ள குறைபாடுகளும் அவனுக்கு உண்டு. கட்டிளங்காளை ; செல்வத்தாலும் பிற பொருள்களாலும் குறைவற்றவன். எல்லாவற்றுக்கும் மேலாக அவனுக்கு அன்பே உருவாகிய காதலி கிடைத்திருக்கிருள். வேறு என்ன வேண்டும் ?

இவ்வளவு வளம் இருந்தும், நித்தம் பாலுணவை உண்பவன் ஒருவன் இடையிலே சிறிது காடியை விரும்பினது போலாயிற்று அச் செயல். அவனுக்கு ஒரு கூட்டாளி வேறு சேர்ந்துகொண்டான். பாட்டினால அவனை மயக்கிய பாணன் மெல்ல மெல்ல அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தான். " வீணையின் இன்னிசையிலே உருகி நிற்கும் உங்கள் சுவையுணர் திறனை நான் போற்றுகிறேன். உயிரில்லாத இந்த யாழின் இசையே இவ்வளவு இனிமையாயின், இன்னும் உயிர்பெற்ற யாழின் இசை எப்படி இருக்கவேண்டும் !" என்று பாணன் ஒரு புதிய செய்தியை எடுத்து விட்டான்.

"அது என்ன ? உயிருள்ள யாழா? அப்படியும் ஒன்று உண்டா ?”

"ஆம் ; உண்டு. கடவுள் படைத்த அந்த யாழ் கண்ணைக் கவரும் ; காதைக் கவரும் ; கருத்தையும் கவரும். அதன் பேரழகைப் பார்த்துக் கொண்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/63&oldid=1529417" இலிருந்து மீள்விக்கப்பட்டது