பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாயின் பிரார்த்தனை

63

 "கடவுளே, நம்முடைய அரசனாகிய, ஆதன் வாழ்க! அவினி வாழ்க! உலகத்தில் பசி இல்லை யாகுக! நோய்கள் யாவும் ஒழியவேண்டும்!” என்று அவள் செய்துகொள்ளும் வேண்டுகோள் அவர்கள் காதில் இன்னிசைபோல வந்து ஒலித்தது.

அவர்கள் வியப்பு மயமாகவே ஆகிவிட்டனர். 'இவள் நமக்குத் தாய் என்று இருந்தோம். நம் அரசனுக்குத் தாய் இவள் ; நாட்டுக்குத் தாய்; உலகுயிர்க் கெல்லாமே தாய். அரசன் வாழ்ந்தால் நாட்டிலே பகையும் பிற இடையூறுகளும் வாராவென்று அவனை வாழ்த்துகிறாள். இயற்கை வளம் குன்றினால் பசிமிகுந்து உயிர்கள் வாடுமென்று எண்ணிப் பசி இல்லையாக வேண்டுமென்று வாழ்த்துகிறாள். நோய் ஒழிகவென்று வாழ்த்துகிறாள். குழந்தையின் பசியும் நோயும் மற்றவர்களைக் காட்டிலும் தாய்க்குத்தானே வருத்தத்தை அளிக்கும்? மகன் வயிறு வாடக் காணாத உள்ளம் படைத்தவள் தாய். குழந்தையின் நோயைப் போக்கும் பொருட்டுத் தான் மருந்து அருந்தும் தயை படைத்தவள் தாய். இவள் ஒரு குழந்தைக்காகக் கவல வில்லை. உயிர்கள் அனைத்தும் பகையின்றிப் பசியின்றிப் பிணியின்றி வாழவேண்டு மென்றல்லவோ வாழ்த்துகிறாள் ? லோக மாதா இவள்' என்று எண்ணி எண்ணி விம்மிதம் அடைந்தார்கள். "இவளை விட்டு வாழவும் அவன் மனம் துணிந்ததே!" என்று இரங்கினர்.

அவர்களுடைய வேண்டுகோள் பலித்தது. தலைவன் பரத்தையர் சூழலினின்றும் விடுபட்டான். தண்டுறையூரன் தேர் அவர்கள் வீட்டுக்கு முன்னே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/71&oldid=1529457" இலிருந்து மீள்விக்கப்பட்டது