பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

எல்லாம் தமிழ்


நின்றது. அறம் பழுத்த மனத்தினளாகிய அந்தப் பெண்தெய்வத்தின் தவம் பழுத்தது. வந்த தலைவனைச் சிறு முனகலும் இன்றி வரவேற்று உபசரித்தாள். முன்னையினும் பன்மடங்கு அன்பு செய்து இன்பம் ஊட்டினாள். அவன் இப்போது, கடந்த நாட்களிலே தன் நெஞ்சை ஓட்டினன், இவ்வளவு அன்புடன் உள்ள இவளை நீத்து வாழ்ந்தோமே! என்ன மதியீனம்! எப் டி மறுகினாளோ!' என்று மிக மிக வருந்தினான்.

ஒரு நாள் ஒரு தோழியைத் தனியே கண்டு, "நான் பிரிந்திருந்த காலத்தில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் ? என்ன பேசினீர்கள் ?" என்று கேட்டான்.

அவள் சிறிது யோசித்தாள். பிறகு சுருக்கமாக விடை சொன்னாள். அந்த விடை சுருக்கமாக இருந்தாலும் பொருளாழம் நிரம்பி, அவர்களுடைய நிலையையும் இயல்பையும் நன்றாக வெளியிட்டது. அந்த விடை இதுதான்:

' வாழி ஆதன்! வாழி அவினி!
பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!'
எனவேட் டோளே யாயே, யாமே,

' முதலைப் போத்து முழுமீன் ஆகும்
தண் துறை ஊரன் தேர்எம்
முன்கடை நிற்க!' எனவேட் டேமே.

--ஐங்குறுநூறு, 5.

[ஆதன் அவினி என்பவன் சேர வம்சத்தில் வந்த மன்னன். இல் ஆகுக-இல்லை ஆகட்டும். சேண் நீங்குக-தூரத்தில் சென்று ஒழியட்டும். வேட்டோள்-பிரார்த்தித்தாள். யாய்-எங்கள் தாய். ஆரும்-உண்ணும். முன்கடை-வாசலுக்குமுன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/72&oldid=1529459" இலிருந்து மீள்விக்கப்பட்டது