பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

எல்லாம் தமிழ்


அவர் முன் நீட்டும் கையைப் பிறர் முன் நீட்டுவதில்லை என்ற விரதம் உடையவன் நான். புலவர் பரிசில் பெறுவது முக்கியமே ஒழிய வலக்கையில் தான் பெற வேண்டும் என்ற வரையறை தொண்டை நாட்டுச் சான்றோருக்கு இருக்க நியாயம் இல்லையே! ஆணூர்ச் சர்க்கரை, புலவர் தவறு செய்தாலும் பொறுக்கும் இயல்புடையவர். அவரிடத்தில் பழகியவர்களுக்கு இடக்கை யென்றும் வலக்கை யென்றும் தெரிவதில்லை. தாய் அணைப்பில் உள்ள குழந்தையைப்போல நாங்கள் ஆகிவிடுகிறோம்."

உபகாரி ஒருவாறு அமைதி பெற்றார். விடை பெற்றுக்கொண்டு சென்றார் புலவர். அவரை வழிவிடச் சென்றார், எல்லப்பருடைய அவைக்களப் புலவர்.

"திருமகளைப் பக்தியுடன் பீடத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும்; அழுக்கிடத்தில் அமரச் செய்யக் கூடாது. உபகாரி தரும் பரிசு திருமகளைப் போன்றது!! வலக் கையால் வாங்குவதற்குரியது" என்று தொண்டை நாட்டுப் புலவர் சொன்னர். அவருக்குக் கொங்குப் புலவர் செயல் சகிக்கவில்லை. அதனால் மனம் புண்பட்டிருந்தது. காரமாகப் பேசி விடவேண்டுமென்றே அவருடன் வழிவிட வந்தார்.

அவர் பேச்சைக் கேட்ட கொங்குப் புலவர், "மோதிரம் இடக் கையில் அணிவதில்லையா? இரு கையாலும் வாரி வழங்குவதையும், ஆசையோடு இரு கையாலும் அதைப் பெறுவதையும் நீங்கள் பார்த்ததில்லையோ? அப்போது இடக் கை ஏற்பதில்லையோ? என் கைக்கா பரிசில் தந்தார்? என் நாவன்மைக்கல்லவா பரிசில் கிடைத்தது? அழுக்காறு, அவா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/82&oldid=1529519" இலிருந்து மீள்விக்கப்பட்டது