பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எல்லாம் தமிழ்


"எப்படி வேண்டுமானாலும் அறியலாம். புலவர் எது செய்தாலும் சிறப்பாக நினைப்பவர் அவர்; நயத்தக்க நாகரிகம் உணர்ந்தவர்" என்றார்.

அன்று சிறந்த விருந்துக்கு ஏற்பாடாகியிருந்தது. தொண்டை நாட்டுப் புலவரும் கொங்கு நாட்டுப் புலவரும் சர்க்கரையும் வேறு சிலரும் அமர்ந்து விருந்துண்ணலாயினர். புலவரை உபசரிக்கும் பேற்றைத் தாமும் பெற வேண்டும் என்ற ஆர்வத்தால் சர்க்கரையின் மனைவியும் தாயும் உணவு பரிமாறினர். தொண்டை நாட்டுப் புலவருக்கு உணவின்மேல் மனம் செல்லவில்லை. சர்க்கரையைச் சோதிக்க என்ன வழி என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது சர்க்கரையின் அன்னை ஏதோ ஒன்றைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று புலவர் வெறி பிடித்தவரைப்போல எழுந்தார். சர்க்கரையின் அன்னை குனிந்து பரிமாறுகையில் சட்டென்று அவள் முதுகின்மேல் ஏறி அமர்ந்தார். விருந்துண்பவர் யாவரும் பிரமிப்படைந்தனர். அன்னையோ சர்க்கரையின் பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள். அவ் வள்ளல் புன்முறுவல் பூத்தார். "என்னை அன்போடு பத்து மாதம் சுமந்தாயே; இந்தத் தமிழ்க் குழந்தையை ஒரு நிமிஷம் சுமப்பதில் வருத்தம் என்ன?' என்று சாந்தமாகச் சொன்னார்.

அடுத்த கணத்தில் புலவர் கீழே குதித்தார். சர்க்கரையின் முன்னலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். 'நான் செய்த பிழையைப் பொறுக்கவேண்டும். உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லை. நீங்கள் கர்ணனென்று சொன்னார்கள். உலகில் எவ்வளவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/84&oldid=1529523" இலிருந்து மீள்விக்கப்பட்டது