பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

எல்லாம் தமிழ்


புலவர் வந்தார். போன காரியம் என்ன ஆயிற்று ?" என்று நண்பர்கள் கேட்டார்கள். அவர்களோடு பேச அவருக்கு மனம் இல்லை. நேரே வேகமாக எல்லப்பரிடம் சென்ருர்.

"பல காலமாக உங்களைப் போன்ற உபகாரி உலகத்திலேயே இல்லையென்று எண்ணிக்கொண்டிருந்தேன். உங்களையே பாடினேன். உங்களுக்கு இணையாக யாரும் இருக்க மாட்டார்களா என்று ஆராய்ந்தேன். யாரும் இல்லையென்ற முடிவுக்கு வந்திருந்தேன். இப்போது வேறு ஒருவரைக் கண்டேன். எனக்கு ஒரு தாயையும் அண்ணனையும் கண்டு கொண்டேன்" என்று அவர் பேசினர் ; பாராட்டினர் ; போய் வந்த கதையைச் சொன்னர். அவர் உள்ளத திலே ஏற்பட்ட உவகை ஒரு தமிழ்ப் பாடலாக உருவெடுத்தது.

செங்குன்றை எல்லாநின் செங்கைக் கொடையதனுக்கு
எங்கெங்கும் தேடி இணைகாணுேம்-கொங்கதனில்
சர்க்கரையைப் பாடலாம்; தண்டமிழ்க்கொன் றீயாத
எக்கரையாம் பாடோம் இனி."

அதைக் கேட்ட எல்லப்பருக்கும் சர்க்கரையின் புகழ் இனித்தது. புலவர் செய்த சோதனையில் வென்ற சர்க்கரையின் புகழைக் கொங்கு மண்டலத்தோடு தொண்டை மண்டலமும் பிற மண்டலங்களும் பாராடடின.

__________________________________________________

★ இணை-ஒப்பு. தமிழ்க்கு ஒன்று. எக்கர்-செருக்குடையோர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/86&oldid=1529528" இலிருந்து மீள்விக்கப்பட்டது