பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேதுபதியின் மோதிரம்

83

 கவிராயர் மனைவி உண்மையை உணர்ந்தாள். ஆலுைம் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. பழைய ஞாபகங்களைச் சற்று மறந்து பாட்டிலே நிலைகொண்டாள். பழைய பாட்டோடு புதிய பாட்டையும் இணைத்துப் பாடினாள். கவிராய்ர் மனைவி அல்லவா ?

அதுவரையில்தம்மை மறந்து கவனித்துக்கொண்டிருந்ந மன்னர் திடீரென்று உடம்பு குலுங்க நிமிர்ந்து நின்றார். பாட்டின் ஒரு கண்ணி அவரை அப்படிச் செய்துவிட்டது. ஆம். அந்தப் பெண்மணி, இதோ மூன்றாம் முறையாகப் பாடுகிருள் :

     "திக்கெட்டும் போற்றிசெய்யும்
          சேதுபதி ராசேந்த்ரன்
      கற்கட்டு மோதிரத்தைக்
           கண்டாசைப் பட்டாயோ"

என்ற கண்ணி இப்போது தெளிவாக அவர் காதில் விழுந்தது. ஒவ்வொரு சொல்லும் மணி மணியாக அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்தது; அப்போது அரசருடைய கண்ணிலிருந்து இரண்டு துளி நீர் உதிர்ந்தது.

" கம்பன் வீட்டுக் கட்டுத் திறியும் கவி பாடும்" என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். விறுவிறென்று இறங்கினர். கீழே போய் ஓர் அழகிய தட்டில் பணமும் ஆடையும் வைத்தார் , தம் கையிலே இருந்த மோதிரத்தைக் கழற்றி அவற்றின் நடுவிலே வைத்தார். தக்க மனிதர் ஒருவரை அழைத்து, " இந்தாரும். கவிராயர் மனைவியாரிடம் கொண்டு போய்க் கொடும். கற்கட்டு மோதிரத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/91&oldid=1529810" இலிருந்து மீள்விக்கப்பட்டது