பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

எல்லாம் தமிழ்


கண்டு ஆசைப்பட்ட குழந்தைக்கு மகாராஜா சம்மானம் செய்திருக்கிருர் என்று சொல்லும்” எள்று தழுதழுத்த குரலிலே கூறி அனுப்பினார். .

" மகாராஜா உங்கள் குழந்தைக்குச் சம்மானம் இது என்று சொல்லி அனுப்பியிருக்கிறார் " என்ற வார்த்தைகளோடு அந்த முதியவர் கவிராயர் மனைவியின் முன்னே நின்றார். அவள் இதை எதிர்பார்த்தவள் அல்லவே மகாராஜா இருப்பதைத் தெரிந்து கொண்ட குறிப்பையல்லவா அவள் வெளியிட்டாள் ? ‘ஆனால், மகாராஜா, தமிழருமை தெரிந்த சேதுபதி, இப்படியல்லவா செய்துவிட்டார் !'

அவளுக்கு நன்றியுரை கூற வாய் எழும்பவில்லை. தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒத்திக்கொண்டாள். அந்தக் கற்கட்டு மோதிரத்தைத் தனியே எடுத்து ஒத்திக்கொண்டாள். அது அவள் கண்ணீரினால் நனைந்து போயிற்று.

எதிரே நின்ற கிழவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

[இந்தக் கதையை எனக்குச் சொன்னவர் கோம்பை - பூரீ க. சண்முகசுந்தரம் அவர்கள்.]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/92&oldid=1530046" இலிருந்து மீள்விக்கப்பட்டது