பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

எல்லாம் தமிழ்


எல்லாம் ஒழுங்காக நடப்பதாகச் சொன்னர்கள். வேறு யாரும் அவரிடம் குறைகளை எடுத்துச் சொல்ல முன் வரவில்லை.

முன்னே சொன்ன பரதேசிக்கு இந்த நாடகத்தைக் கண்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. மேலதிகாரி வந்துங்கூட, நடக்கும் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவு ஏற்படாவிட்டால், அரக்க ராஜ்யம் நீடித்து நடக்க வேண்டியதுதான் ஆகவே, எப்படியாவது துணிந்து, வந்திருக்கும் அதிகாரிக்கு விஷயத்தை விளக்க வேண்டுமென்று தீர்மானம் செய்துகொண்டார். 'நமக்கு என்ன நீங்கு நேர்ந்தாலும் நேரட்டும். நம்மால் பலருக்கு நன்மை உண்டாகும்’ என்ற துணிவு அவருக்கு உண்டாயிற்று. அடுத்த கணம் அவருக்கு ஓர் உபாயம் தோன்றியது. அப்படிச் செய்வதே சரி யென்று நிச்சயப்படுத்திக் கொண்டார்.

அதிகாரி முருகன் சந்நிதியில் வந்து தரிசித்துக் கொண்டிருந்தார். அர்ச்சனை நடந்து கொண்டிருந் தது. அப்போது பரதேசி தூரத்தில் நின்றுகொண்டு தம்முடைய இனிய குரலில் திருப்புகழ் பாடத் தொடங்கினார். மிகவும் இனிமையாகவும் உருக்கமாகவும் பாடினார். அதிகாரியின் மனசை அந்தப் பாட்டு இழுத்தது. மற்றவர்களைப்பற்றிச் சொல்லவே வேண்டிய தில்லை. அதிகாரி ஆண்டவனைப் பார்ப்பதும், திரும பிப் பரதேசியைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தார். அவருடைய கவனம் தம்மேல் விழுவது பரதேசிக்குத் தெரிந்தது. உடனே திருப்புகழை முடித்து விட்டு, அலங்காரம் பாடினர். பிறகு வேறு ஏதோ பாட்டைப் பாட ஆரம்பித்தார். நிதானமாக, வார்த்தைகள் தெளிவாக விளங்கும்படிப் பாடினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/96&oldid=1529819" இலிருந்து மீள்விக்கப்பட்டது