பக்கம்:எல்லாம் தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கிய ஆதாரங்கள்

புலவர் இட்ட சாபம்:

இந்தக் கதைக்கு மூலமானது, குறுந்தொகை 292-ஆம் பாட்டு.

  மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
  புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
  ஒன்பதிற் ருென்பது களிற்ருெ டவள்நிறை
  பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
  பெண்கொலை புரிந்த நன்னன் போல
  வரையா நிரையத்துச் செலீ இயரோ அன்னை
  ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
  பகைமுக ஊரிற் றுஞ்சலோ இலளே.

நன்னனுடைய காவல் மரமாகிய மாவைக் கோசர் வெட்டினர் என்பது குறுந்தொகை 73-ஆம் பாடலால் தெளிவாகும்.

  மகிழ்நன் மார்பே வெய்யை யால்நீ ;
  அழியல் வாழி தோழி, நன்னன்
  நறுமா கொன்று நாட்டிற் போகிய
  ஒன்றுமொழிக் கோசர் போல
  வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.

இந்த இரண்டு பாடல்களும் பரணர் பாடியவை.

பக்கம். 17. பெருந்தலைச் சாத்தனுர் பாடியது, புறநானுற்றில் 151-ஆம் பாடலாக உள்ளது.

   பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
   விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எல்லாம்_தமிழ்.pdf/99&oldid=1530044" இலிருந்து மீள்விக்கப்பட்டது