பக்கம்:எழிலோவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

'உருக்கிய நெய்யை வெண்ணெய் உருண்டை ஆக்கல் உண்டோ ? சுருங்கியே வீழ்ந்த பூவில் மது மீண்டும் துளிர்த்த துண்டோ?' என்னும் வினாக்களைத் தொடுத்து நம்மைச் சிந்திக்க வைக்கின்றார். சுடுகாட்டைக் கண்டு அங்கே இருந்த நடுகற்களில் ஒன்று சிறப்பாகவும், மற்றொன்று எளிய தன்மையிலும் இலங்குவதைக் கண்டு, 'மக்களின் நிலைமைக்கு ஏற்பப் புதை குழி இருக்கக் கண்டேன். புழுங்கினேன். உயர்வு தாழ்வு இதிலுமா?' என்பது அவருடைய சமதரும நோக்க நிலையினை கமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

நம் வாணிதாசனார் ஒரு சாதாரண கவிஞர் அல்லர். ஊன் மறந்து உயிர் மறந்து நினைந்து நினைந்து தெளிந்த அரிய கருத்துக்களைத் தமக்குத் தோன்றிய போதெல்லாம் அவைகளை அப்படியே குறித்து வைக்கும் ஓர் இயற்கைக் கவிஞர்; கவி புனைவதற்காகவே பிறந்தவர். இவருடைய பாடல்கள். என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தவை. இவர் சீக்கிரத்திலே உலகக் கவிஞருள் ஒருவராகத் திகழக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். இவருடைய பாடல்கள் பொருளாழம் உடையன. சொற்கள் எளிமையாகத் தோன்றினும் பல உயர்ந்த கருத்துக்களைத் தாங்கி நிற்கின்றன. தமிழுலகம் இவருடைய பாடலைப் பயன் படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இந்தக் காலத்திற்கும் எந்தக் காலத்திற்கும் தேவையான செய்திகள் எல்லாம் இவருடைய 'எழிலோவிய'த்தில் அமைந்து கிடக்கின்றன. இவருடைய பாடல்களுள் ஓர் அடியினைப் பல பக்கங்களாக விரித்து எழுதலாம். அத்தகைய பொருட் செறிவு இவருடைய பாடல்களிலே காணப் படுகின்றன.

அன்பர் வாணிதாசரை நான் சுமார் பத்தாண்டுகளாக அறிவேன். அவருடைய அரிய பாடல்களை உலகம் மதிக்கின்றது என்பதற்கு அறிகுறியாக அவருக்குத் தமிழ் நாடு ஒரு பொற் கிழி உதவ வேண்டும் என்பது என் ஆசை. நம் தமிழ் நாட்டிற்குப் பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகளாக இருந்து இக்காலத்துக்கு வேண்டிய வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/11&oldid=1300760" இலிருந்து மீள்விக்கப்பட்டது