பக்கம்:எழிலோவியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


3

மங்கையர்க் கழகு செய்யும்
வார்குழல் மானும் என்றே
இங்குள புலவ ரெல்லாம்
இயம்புவர்; முகிலிற் பூக்கள்
தங்குமோ ? எருமைக் கொம்புச்
சடைகளைக் காணப் போமோ ?
பொங்கிய நறுநெய் பூசி
ஊசிகள் புனைதல் உண்டோ ?

4


தூக்கிய கூடா ரத்துத்
துணிகளின் கிழிசல் வானம்
தேக்கிய வெண் முகில்கள் !
அந்தியில் செந்தீக் காடாம் !
நோக்கடா ! கீழ்வான் தங்கக்
காட்டாறு ! நுண்மு கில்கள்
ஆக்கிய அழகைக் காண
ஆயிரம் கண்கள் வேண்டும் !

5


உருக்கிய பொன்எங் கெங்கோ
ஓடிப்பாய் வதைப்போல் நீண்ட
கருக்கலில் மின்னல் ! வெள்ளித்
தட்டினில் கதிர்கள் முட்டிப்
பெருக்கிடும் ஒளியின் வீச்சே
பெயல்வானம்! தொடுவான் மின்னல்!
கருக்கலில் நடப்போர் கைவாழ்
மின்விளக் கொளிபோல் தோன்றும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/27&oldid=1302786" இலிருந்து மீள்விக்கப்பட்டது