பக்கம்:எழிலோவியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

6

தொலைவினில் நீள்பா லத்தே
தொடர்ந்தோடும் வண்டி போல,
பலகட்டுக் கோப்பி டிந்து
வீழ்கின்ற பான்மை போல,
மலையினைப் பிளக்க வைத்த
வெடிகளைப் போல வானில்
அலைப்புண்டு முகிலின் கூட்டம்
ஆர்ப்பாட்டம் செய்யும் தம்பி !

7


ஆலையின் புகையைப் போல
அடிவானத் தெழுந்து தாவும்;
கோலவான் மறைக்கும்; மங்கிக்
குமுறிடும்; குன்றில் மோதும்
சூல்கொண்ட முகிலின் கூட்டம்!
பெய்துபின் சோர்ந்த போதோ
மாலூட்டும் கடலோ ரத்து
மணல்வெளிப் பரப்பாய்த்
தோன்றும் !

8


கார்ப்படை முழக்கும் வானில் !
கார்ப்படை முழக்கும் ஆற்றில்!
ஏர்ப்படை உழவர் போல
ஏர்ப்புடை உழவர் ஆர்ப்பார்!
போர்ப்படைத் தலைவன்செந்நெற்
போர்ப்படைத் தலைவ ரெல்லாம்
ஆர்படைத் திட்டார் ? தம்பி !
கார்முகில் அமிழ்தம் ஆமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/28&oldid=1302791" இலிருந்து மீள்விக்கப்பட்டது