பக்கம்:எழிலோவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28


9

ழங்குவோர் பொதுவா னாலும்
வாங்குவோர் சமமாய் வாங்கக்
கிழக்கதை பேசி ஏய்ப்போர்
கெடுக்கின்றார்; இந்த நாட்டில்
பழக்கத்தால் உயர்வு தாழ்வு;
படைப்பினால் அல்ல தம்பி !
முழக்குவோம் எங்கும் வளத்தை
முடக்குவோர் முடக்கி நாமே !

10


 விளைவயல் பொட்டல் என்ற
வேற்றுமை கருதா தென்றும்
அளித்துயிர் ஓம்பு கின்றாய் !
அன்னையே ! முகிலே ! வாழி !
விளைவினை மக்க ளெல்லாம்
பொதுவாகத் துய்க்கும் மேன்மை
முளைத்திடில் தமிழர் நாட்டில்
முளைத்திடும் இன்ப வாழ்வே

___________

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/29&oldid=1301992" இலிருந்து மீள்விக்கப்பட்டது