பக்கம்:எழிலோவியம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

9

நீண்டநாள் மக்கட் கின்பம்
கொடுத்திட நினைத்த தொட்டி,
நீண்டநாள் நிலைத்து வாழ
நினைத்திட்ட தொட்டி, சென்ற
ஆண்மகன் தலைவி எண்ண
அறிவூக்கும் தொட்டி ஒட்டை !
தீண்டாதே தம்பி ! நூறு
சுக்காகச் சிதறிப்போமே !

10


ண்டவர் மகிழ்ச்சி கொண்டே
உதவினார்க் கின்பம் மீறும் !
வண்டினம் பூந்தேன் உண்டு
மகிழ்வதைக் கண்ட தொட்டி
பண்டைய நிலையில் பார்க்கத்
தோன்றினும் ஒட்டை ! கையைக்
கொண்டுபோ காதே தம்பி !
தூளாக நொறுங்கிப் போமே !

---------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/53&oldid=1299278" இலிருந்து மீள்விக்கப்பட்டது