பக்கம்:எழிலோவியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிழவி-1

1

முற்றிய கருப்பம் பூவாம்
தலைமயிர்! முதுமை காட்டும்
நெற்றியின் சுருக்கம் புன்செய்
நிலந்தோன்றும் படைச்சா லாகும் !
வற்றிய கன்னம் காய்ந்த
மாங்கனி! குழிந்த கண்கள்
முற்றிய பிரப்பங் காயின்
முழுநீல மஞ்சள் காட்டும !

2


ங்கெங்கே ? கோலை எங்கே ?
தழைமூங்கில் எங்கே ? தென்னை
தொங்கிய குலையில் வாய்த்த
இளநீரின் தோற்றம் எங்கே?
கங்குலைக் கிழிக்கும் மின்னல்,
கார்மயில், வாழை, அம்பு
தங்கிய பெட்டி என்ற
தனித்தமிழ் உவமை எங்கே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/58&oldid=1299260" இலிருந்து மீள்விக்கப்பட்டது