பக்கம்:எழிலோவியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

3

பேதை

சிலைசெயக் கொல்லன் தேடும்
இரும்பாகும் கண்கள்! வாய்ச்சொல்
மலையடைப் பிழியாத் தேனும்;
வளராத கரும்பாம் தன்மை!
இலைசில விட்டுப் பூக்கள்
இட்டறி யாத கொம்பாம்!
நிலவொளி பாயப் பாலாய்க்
குடித்திட நினைக்கும் பேதை!

4


கொட்டையும் மணமும் தேனும்
குளிர்மலர் அரும்பும் மொட்டும்
செட்டாகத் தன்னில் கொண்டு
பேதையாய்த் திகழ்ந்த நாளைக்
கொட்டாவி விட்டுக் குந்தி
எண்ணுவாள் கிழவி ! கூனைத்
தொட்டொரு சிறுவன் கிள்ளிச்
சிரித்திடத் துடிப்பாள் அந்தோ !

5


பெதும்பை


தாயுடன் சேர்ந்து நீந்தும்
தடக்கயல், காளை மார்பில்
பாய்ந்தறி யாத கண்கள் !
பருமலர் நகை! ப ருத்திக்
காய்களே மார்பு ! செஞ்சொல்
கலப்பிலாப் பாலாம் ! இன்ப
வாயிதழ் கோவைச் செங்காய் !
பெதும்பையின் வண்ணம் ஆமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/59&oldid=1301733" இலிருந்து மீள்விக்கப்பட்டது