பக்கம்:எழிலோவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது வேட்கை


வித்துவான் வாணிதாசர் பாக்களில் சில என் முன்னிலையில் படிக்கப்பட்டன. அவை, காதுக்கும் கருத்துக்கும் விருந்தாயின. தமிழ் நலம் பேணுதல் வேண்டு மென்பது ஆசிரியர் உள்ளக் கிடக்கை. அவர்தம் தாளாண்மை வெல்க!

தோழர் வாணிதாசருக்குப் பிரஞ்சு மொழிப் புலமையும் உண்டு என்று அறிகிறேன். தமிழ் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அம்மொழிப் புலமையும் துணை செய்தல் ஒருதலை.

இந்நாளில் புது உலகம் முகிழ்த்து வருதல் கண்கூடு. அதற்குத் தோழர். எழுத்தோவியம் துணை போகும் என்று நம்புகிறேன்; உறுதியாக நம்புகிறேன்.

திரு. வாணிதாசர். ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை. முதியர், வேட்கை இளைஞர் ஊக்கத்தை நிறைவேற்றுதல் இயல்பு, வாணிதாசர் வாழ்க! இவரது தூய தீந்தமிழ் தமிழ் வளர்க!

சென்னை 
15-7'52
திரு.வி.க
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/6&oldid=1300737" இலிருந்து மீள்விக்கப்பட்டது