பக்கம்:எழிலோவியம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



63

6

தெரிவை

ழுங்கிய வேலாம் கண்கள் !
வாய்ச்சொல்லோ இடையில் வந்து
நுழைந்திட்ட மாற்றார் கொள்கைத்
துணையினால் யாத்த நூலாம் !
வழுவழுப் பழிந்த கன்னம்
வாடிய சாந்து! மார்பு
பழந்தூங்கும் வெளவால் ! மேனி
பழுப்பேறும் இலையாம் தம்பி !

7


தெரிவையாம் போழ்து சென்ற
ஆளனை நினைத்த நெஞ்சம்
தெருவினில் புழுதி ஆடும்
சிறுவரைப் பார்த்து மாறும்
பெருமையைக் கிழவி தன்னுள்
எண்ணுவாள்; பேரப் பிள்ளை
வரும்போதும் மீளும் போதும்
மனஞ்சோர்வாள்; வாடு வாளே !

8


பேரிளம் பெண்


போரிட உதவா வேலாம்
பொலிவிலாக் கண்கள் ! கோடைக்
காராகும் கூந்தல்! மார்போ
ஒட்டுமாங் கனிக ளாகும் !
நீரிலா ஒடை கன்னம்!
நிழல்இலாத் தோப்பே வாயாம் !
பார்வைக்கு வெறுப்பை யூட்டும்
பேரிளம் பெண்ணின் பார்வை !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/64&oldid=1299693" இலிருந்து மீள்விக்கப்பட்டது