பக்கம்:எழிலோவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

3

ன்னியின் குழலில் தங்கிக்
களிநடம் புரிந்தாய் ! அந்தக்
கன்னியின் கூந்தல் நாறக்
கடிமணந் தந்தாய் ! கைவேல்
மின்செயக் குறியைச் சேர்ந்த
விரிமார்பன் கழுத்தி ருந்தாய் !
உன்னிலை, உதிர்ந்த பூவே !
மக்களேன் நினைப்ப தில்லை ?

4


தேடிவந் தணைந்த புள்ளிச்
சிறுவண்டின் எழிலைக் கண்டோ,
பாடிய பாட்டைக் கேட்டோ
உன்னைநீ கொடுத்தாய் கொள்ளை ?
ஆடினாய் காற்றில்; இன்ப
அசைவினில் திளைத்தாய்; சோர்ந்தாய்;
வாடிநீ உதிர்ந்தாய் ! உன்னை
மக்களேன் நினைப்ப தில்லை ?

5


ன்னிலை உணரார், மக்கள்
தம்நிலை உணரார் என்றும் !
உன்னிதழ் மங்கை நல்லார்
செவ்விதழ் ! ஒளிசேர் பற்கள்
பொன்மேனி மொட்டுப் பூக்கள் !
பசலையோ பூவின் தாதாம் !
உன்னிலை, உதிர்ந்த பூவே !
மக்களேன் நினைப்ப தில்லை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/67&oldid=1300777" இலிருந்து மீள்விக்கப்பட்டது