பக்கம்:எழிலோவியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



67

6

ளர்த்தவர் களிக்க மக்கி
வாடிடு மலரே ! உன்னை
வளர்த்தவர், ஓடி வந்தார்
வாயுரைச் சேற்றில் வீழ்ந்தார் !
உளத்தினில் எதையும் தூக்கி
உணர்விட்டுப் பார்க்கும் செய்கை
இளைத்ததால் மக்கள் வாழ்வு
இளைத்ததே ! உணர்வு தேவை !

7



சங்கிய மலரே ! உன்னைக்
கண்டதும் இந்த நாட்டில்
கசங்கிய மலர்கள் சிந்தும்
கண்ணிரென் கண்முன் தோன்றும் !
கசங்கிய தெதனால் என்று
கருத்தூன்றிப் பாரா மக்கள்
கசங்கியே வாழ்த லன்றிக்
களிப்போடு வாழ்த லுண்டோ ?

8



காளையின் குறும்பை, ஊடற்
கன்னியின் மூச்சை ஒவ்வோர்
வேளையும் கேட்டுக் கேட்டு
வேதனை கொண்டாய் ! ஊரை
ஆளுவோர், அடங்கி வாழ்வோர்
அத்தனை பேர்க்கும் இன்பம்
மூளவே பகிர்ந்தாய் ! உன்போல்
முற்போக்கு மக்கட் குண்டோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழிலோவியம்.pdf/68&oldid=1299729" இலிருந்து மீள்விக்கப்பட்டது