பக்கம்:எழில் உதயம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எழில் உதயம்

அன்னேயைக் காட்டிலும் இரக்கம் உடையவர் யாரும் இல்லை. அவளைக் காட்டிலும் எளிய அன்பினரும் இல்லை. பூரீமாதாவாகிய அவளிடம் எந்த நிலையிலும் அன்பு செய்யலாம்.

岑 苯 Sk

மனம், வாக்கு, காயம் என்னும் மூன்று கரணங் களாலும் இறைவியை வழிபடவேண்டும். இந்த மூன்றிலும் சிறப்பானது மனம். அம்மையை மனத்தால் நினைப்பதற்கு இன்னதுதான் நேரம், இன்னதுதான் நிலை என்ற வரை யறை இல்லை. நாம் எப்போதுமே மூச்சு விட்டுக்கொண் டிருக்கிருேம். பேசினலும் பேசாவிட்டாலும், துரங்கின. லும் விழித்திருந்தாலும் மூச்சு விடுவது நிற்பதே இல்லை. டாக்டர் மயக்க மருந்து கொடுக்க, உணர்வு இழந்து உடம்பு கட்டையாகிக் கிடக்கும் போதும் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிருேம். உயிர் உடம்பில் இருப்பதற்கு அடை யாளம் இது. -

அன்னையின் நினைப்பு மூச்சு விடுவதுபோல அமைய வேண்டும். நின்ருலும் உட்கார்ந்திருந்தாலும் படுத்திருந் தாலும் அவள் நினைவு நம் உள்ளத்தே இழையோட வேண்டும். நமக்கு விழிப்பு இருக்கும்போதெல்லாம் 'நாம் இன்னுர்’ என்ற நினைப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதனேடு, நாம் அன்னையின்.குழந்தை என்பதும் இணைந்துவிட வேண்டும். அப்படி ஒரு பழக்கம் வந்துவிட்டால் எல்லாக் காலத்தும் அம்மையை நினைத்துக்

கொண்டே இருக்கலாம். .

இத்தகைய நிலயை அடைந்த அபிராமியட்டர் அம்பிகையை நோக்கிப் பாடுகிரு.ர். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/102&oldid=546259" இலிருந்து மீள்விக்கப்பட்டது