பக்கம்:எழில் உதயம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எழில் உதயம்

  • அருளது சத்தி யாகும் அரன் றனக்கு’ என்பது சிவஞான சித்தியார். .

எம்பெருமாட்டியின் பேரருளுக்கு எடுத்துக் காட் டாகப் பலவற்றைச் சொல்லலாம். குணம் குறி கடந்த பிராட்டி உமாதேவியாக எழுந்தருளி இமயவரை அரச னுடைய குமாரியாக உலவினுள். அது அவளுடைய கருணைத் திருவிளையாடல் பராசக்தி எட்டாக் கொம்பில் இனிக்கும் பழமாக இருப்பவள்; கனிச் சாறு கிழிந்து மலையிலே ஆருக ஓடியதுபோல அந்தப் பெருமாட்டியே இமய அரசன் மடமகளாக வந்து துள்ளி விளையாடினுள்; பக்தர்களுக்கு மணக்கோலம் காட்டி மகிழ்வு தந்தாள்; அப்பன் அருகில் அம்மையாக வீற்றிருந்து அருள் பாலிக்கிருள். -

உமையே, இமயத்து அன்றும் பிறந்தவளே! உமா என்ற திருநாமமே உமை என்று தமிழில் வந்தது. அந்த நாமத்துக்குப் பல வகைப் பொருள் உண்டு. லலிதா சகசிரநாமத்தில் 633-ஆம் திருநாமமாக உள்ள அதற்குப் பல சிறப்புகளைக் கூறுகிருர், அந்நூலின் பாஷ்யகாரராகிய பாஸ்கர ராயர்.

ஒம் என்ற பிரணவம் அகார உகார மகாரங்களால் அமைந்தது. உமா என்பதிலும் அந்த மூன்றும் இருக்' கின்றன; உகார மகார அகாரம் என்ற முறையில் உள்ளன. இதைத் தேவீப்ரணவம் என்று சொல்வது மரபு. லிங்க புராணமும் மகாவாசிஷ்டமும் இந்த உண்மையை உணர்த்துகின்றன. ஆகவே ஓங்காரத்திற்கு எத்தனை வகையான பொருள்கள் உண்டோ அவ்வளவும் இத் திருநாமத்துக்கும் உண்டு.

உ என்பது சிவபெருமானையும், மா என்பது திரு. மகளையும் குறிப்பன. சிவபெருமானத் திருவுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/108&oldid=546265" இலிருந்து மீள்விக்கப்பட்டது