பக்கம்:எழில் உதயம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரளுரவிந்தம்

அழியாத முத்தியானந்தமாகி நிலவுகிறவள் தேவி என்று சொன்னவர் தொடர்ந்து, 'ஆனந்தமாய் என் அறிவாய்” என்று அடுத்த பாட்டைத் தொடங்குகிரு.ர். ஆனந்தம் எங்கே இருந்தாலும் அங்கே அம்பிகையின் தொடர்பு இருக்கும். கனியில் சாறும், மலரில் மணமும், தேனில் இனிமையும், பாலில் நெய்யும், பாட்டில் பண்ணும், உடம்பில் உயிரும் இன்பத்தைத் தருவன. அவற்றிலெல்லாம். அம்மையின் அருள் விலாசம் இருக்கும். திங்களில் தண்மையும் கதிரவனில் ஒளியும் தென்றலில் மென்மையும் பிரபஞ்சப் பொருள்களில் அழகுமாக இருந்து இன்பம் தருகிறவள் அவள். -

ஆதலின் அடையில்லாமலே, ஆனந்தமே என்று சொல்கிரு.ர். ஆனந்த கலிகா” (ஆனந்த மாத்திரமா யிருப்பவள்) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று (729). அவள் ஆனந்தமே வடிவமாக இருப்பவள். எல்லா இன்பங்களுக்கும் மேலான பரமானந்த ஸ்வரூபியாக இருப்பவளும் அவளே. அதனுல்தான் பரமானந்தா’ (லலிதா சக சிரகாமம், 252) என்ற திருநாமம் அன்னைக்கு அமைந்தது. - -

ஆனந்தம் அடைய விரும்புவார் அம்மையின் அருளைப் பெற வேண்டும். இன்பதுன்ப அநுபவங்கள் நிறைந்தது உலக வாழ்க்கை. இந்த வாழ்க்கை ஆனந்த மயமாக வேண்டுமானல் இறைவியின் திருவருளைத் துணை கொள்ள வேண்டும். கசப்பான மருந்துகளுக்கு இனிப்பான தேனே அதுபானமாகக் கொண்டு உண்ணுவதுபோல, பழம் பிறவியிற் செய்த விண்களின் பயனுக இப்போது நுகரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/113&oldid=546270" இலிருந்து மீள்விக்கப்பட்டது