பக்கம்:எழில் உதயம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் 115

இப்போது நேர்மாருக, கடைசியிலிருந்து முதல் வரையில் எண்ணுவதாக இருக்கும்.

அபிராமியின் புகழை எப்போதும் எண்ணி வாழும் நிலைக்கு வந்த அபிராமி பட்டருக்குத் தாம் வந்த வழி இப் போது தலைகீழாக நினைவுக்கு வருகிறது. எல்லாவற்றையும் நினைந்த பிறகு வியப்பு மீதுர்கிறது.

கண்ணியது உன் புகழ்.

அபிராமியின் புகழையே அவர் எப்போதும் எண்ணிய வண்ணம் இருக்கிருர். உலகியற் பொருள்களையும் மனிதர் களின் புகழையும் நம்முடைய பெருமையையும் எண்ணி எண்ணிக் காலங்கழிக்கும் நமக்கும் இந்த நிலைக்கும் நெடுந்துாரம், யாராவது திடீரென்று அடித்தால், ஐயோ!' என்று அலறுவோமே ஒழிய, அம்பிகே என்று சொல்ல வராது. -

தண்ணீர் நிரம்பிய ரப்பர்க் குழாயை ஊசியால் குத் திளுல் தண்ணீர் அந்தத் துளை வழியே வேகமாக வரும். ஒன்றும் இல்லாத குழாயைக் குத்தினுல் வெறும் காற்றுத் தான் வரும். நம் உள்ளத்தில் அழுத்தமாக அன்னையின் நினைவு இல்லை. இருந்தால் எந்தக் கணத்திலும் அதுதான் வெளியாகும்.

"வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான்அறியேன்மறு மாற்றம்’ -

என்று சுந்தரமூர்த்தி நாயனர் பாடுகிருர். அவர் உள்ளம் முழுவதும் இறைவனுடைய நினைவே நிரம்பியிருந்தது.

அன்னையின் புகழை எப்போதும் எண்ணியிருக்க வேண்டுமானல், அதற்குமுன் பல பயிற்சிகளைச் செய் திருக்கவேண்டும். பல படிகளைக் கடந்த பிறகே இந்த நிலை கிடைத்திருக்கிறது. இவ்வாறு, நின் புகழையே எண்ணுவது எளிதில் வந்துவிடுகிற காரியமா? இதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/123&oldid=546280" இலிருந்து மீள்விக்கப்பட்டது