பக்கம்:எழில் உதயம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 எழில் உதயம்

முன் என் வாயால் எத்தனை முறை உன் திருநாமங்களைச்' சொல்லியிருப்பேன்!” என்கிருர் பட்டர். ar

கற்பது உன் நாமம்.

நாமத்தை ஒருமுறை இருமுறை சொல்வது கற்பது ஆகாது. நாவில்ை சொல்வதோடு அதன் பொருளை மனத் திற்ை சிந்தித்து ஈடுபடவேண்டும். சொல்வது, ஒதுவது, பயில்வது, கற்பது என்று பல படிகள் உண்டு. நாமத்தை நாவில்ை ஒலிப்பது சொல்வதாகும். அதனைப் பலகால் சொல்வது ஒதுவதாகும்; பாராயணம் என்று சொல்வது தான் ஒதுவது. பிறகு அதன் பொருளே உணர்ந்து பலகால் பழகுவது பயில்வது ஆகும். வாயில்ை சொல்லி, அறிவினல் பொருளை அறிந்து, உணர்வில்ை உணர்வதே கற்பது ஆகும்.

'வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’

என்பது ஒளவையின் உபதேசம், வாயினல் சொல்லி மனத்தினுல் உணர்ந்து நின்ருல்தான் அதற்கு மேற் பட்ட படிக்குப் போக முடியும். வாய்ச்சொல் நழுவி உள்ளம் அன்னையின் புகழையும் உருவத்தையும் எண்ணி இன்புறும் நிலைதான் முதலில் சொல்லியது. அதற்கு முன் நிகழ்ந்தது; வாயும் மனமும் இணைந்த செயலாகிய கற்பது. இங்கே வாக்கு மெல்ல மனத்தைப் பற்றிக் கொண்டு திருநாம பாராயணத்தில் ஈடுபடுகிறது. தியானம் என்ற படிக்கு முன்படி பாராயணம். புகழ் விரிவை உணர்வதற்கு முதற்படி திருநாமப் பயிற்சி. ழுதலில் ஒருவருடைய பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு அவருடைய பெருமையைத் தெளிவது இயல்பு. அந்த முறையில் அன்னையின் நாமத்தைக் கற்றுக் கைவந்த பிறகு அவள் புகழை எப்போதும் கண்ணும் நிலை வந்தது. காரிய காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/124&oldid=546281" இலிருந்து மீள்விக்கப்பட்டது