பக்கம்:எழில் உதயம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் செய்த புண்ணியம் 117

முறையில் வைத்து நினைத்துப் பார்ப்பதனுல் முதலில் புகழைக் கண்ணிய நிலையும், அதற்கு முந்திய நாமம் கற்கும் நிலையும் தொடர்ந்து வந்தன. மனச்செயலாகிய விளைவும் அதற்குக் காரணமாகும் வாக்குச் செயலாகிய கற்பதும் சொன்னர்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் காமம். இன்னும் முன்பு செல்கிரு.ர். எளிதிலே எம்பெரு மாட்டியின் நாமத்தைக் கற்க முடிந்ததா? அதற்கு முன் எத்தனையோ கோயில்களுக்குச் சென்று அம்பிகையின் திருவுருவத்தைத் தொழுது திருவடியில் விழுந்து வணங் கினர். சும்மா கோவிலுக்குச் சென்று வேடிக்கை பார்ப்பதுபோலப் பார்த்தால் பயன் உண்டாகுமா? மனத்தில் அன்னையினிடம் அன்பு இருக்க வேண்டும்; உள்ளம் நெகிழ்ந்து கசியவேண்டும். உண்மையான பக்திக்கு அடையாளம் கசிவு. இறைவியின் பாதாம்பு யத்தில் விழுந்து வணங்கி அப்பெருமாட்டியின் திருமுன் நிற்கும்போது உள்ளம் கசிந்தால் கண்ணும் கசிந்து புனல் வாரும். அவளை நினைந்து கசிவது பக்தியின் மூன்ருவது படி, அவளைப் பாடிக் கசிவது இரண்டாவது படி; அவளைத் தரிசித்துக் கசிவது முதல் படி. கண்ணுற் காணும்போது உள்ளத்தே அன்பு பொங்கி வந்தால்தான் அந்தக் கசிவு ஏற்படும்.

ஒரு பெண்மணி பலர் கூடியுள்ள கூட்டத்தின்முன் தோன்றுகிருள், எல்லோரும் அவளைப் பார்ப்பார்கள்; அவள் அழகைப் பார்ப்பார்கள். அந்தக் கூட்டத்தில் அவள் குழந்தை இருந்தால் எல்லோரும் பார்ப் பதுபோல அது பார்க்காது. தாயின்பால் உள்ள அன்பு அதன் உள்ளத்தில் பொங்கி வரும். அம்மா!' என்று கூவிக்கொண்டு போய்த் தாயின் காலக் கட்டிக் கொள்ளும். அதுபோல அபிராமியின் இரண்டு பாதார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/125&oldid=546282" இலிருந்து மீள்விக்கப்பட்டது