பக்கம்:எழில் உதயம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 எழில் உதயம்

யின் பக்தி உணர்வு உண்டாகி, அவளுடைய பாதாம்பு யத்தைத் தொழும் நிலை வரும்; அதனல் அவள் புகழைக் கண்ணும் நிலை வரும்.

கணிப் பருவத்தில் நிற்பவர், இப்போது வந்த வழி யைப் பார்க்கிருர். காயும் பூவும் அரும்பும் ஒன்றன்பின் ஒன்ருக நினைவில் வருகின்றன. அல்லும் பகலும் அபிராமியை விரும்பிப் பக்தி பண்ணிய தொண்டர்களின் கூட்டத்தை நண்ணியதிலிருந்து தொடங்கியது இந்தப் பக்தித் பயணம்.

பகல் இரவா கண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து.

ஆரம்ப முயற்சி கடினமாகவும் விரிவாகவும் இருக் கும். வர வர அந்தக் கடுமை குறையும். வர வர விரிவும் குறையும். கோபுரம் அடியிலே விரிந்து வர வரக் குறுகிக் கும்பத்தில் முடிவது போல, முன் முயற்சிகளில் இட விரிவும் முயற்சி விரிவும் இருக்க, பிறகு அவை சுருங்கி வரும். -

முதலில் தொண்டர் கூட்டம் எந்த எந்த இடங்களில் உண்டோ அந்த இடங்களை நாடிச் சென்ருர், பகலென்றும் இரவென்றும் பாராமல் போளுர்; எங்கே பஜனை நடக் கிறது, எங்கே பாராயணம் செய்கிருர்கள் என்று.அன்பர் களிள் கூட்டத்தை நாடினர்; எப்போது நடக்கிறது என்று நேர்த்தைத் தெரிந்துகொண்டு சென்ருர். இந்த முயற்சியை விரிவாகச் செய்தார். பிறகு பக்தி உணர்வு தலைப்பட்டதும் கூட்டத்தை நாடுவதை விட்டுக் கோயிலை நாடினர். முயற்சி விரிவு இப்போது அத்தனை இல்லை. அம்பிகையின் திருவுருவைத் தரிசித்துப் பாதாம்புயத் தைப் பணிந்தார். இப்போது பல பல இடங்களுக்குச் செல்வது குறைந்தது. அப்பால் அவள் திருநாமத்தை ஓதிக் கற்ருர், இட விரிவு குறைந்தது மட்டும் அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/128&oldid=546285" இலிருந்து மீள்விக்கப்பட்டது