பக்கம்:எழில் உதயம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

அபிராமி பட்டர்

சரபோஜி மன்னர் தம்முடைய இருப்பிடத்தில் தங்கி யிருந்தபோது அவர் மனம் எண்ணமிட்டது; நம்மைக் கண்டு இப்படி மாறுபாடாகப் பதில் சொன்னரே அவர்; அவரைப் பித்தர் என்று சொன்னர்களே. பித்தராக இருந்தால் அவ்வளவு நேரம் ஒன்றையும் கவனியாமல் கண்ணை மூடிக்கொண்டு நிற்க முடியுமா? அவர் நெற்றியிலே ஒளி இருந்ததே!-இவ்வாறு அவர் சிந்தனை ஒடியது.

அப்போது முன் இரவு நேரம். மன்னருக்குத் துாக்கம் வந்தது. சற்றே படுத்தார். அப்போது அவர் ஒரு கனவு கண்டார். கனவில், அபிராமியம்பிகை எதிரே நிற்கிருள். தன்னுடைய காதில் உள்ள ஒரு தோட்டைக் கழற்றிக் கீழ்த்திசையில் வீசி எறிகிருள். அது கீழ் வானத்தில் நின்று முழுமதியைப்போல் நிலவு பொழிந்து சுடர் விடுகிறது. 'அருகில் நின்ற அபிராமிபட்டர், "இதோ பாருங்கள், பூர்ண சந்திரனை. இன்று பெளர்ணமியல்லவா?’ என்கிரு.ர்.

அரசர் கனவிலிருந்து விழித்துக்கொண்டார். கனவிலே கண்ட காட்சி அவரை எல்லையற்ற வியப்பில் ஆழ்த்தி விட்டது. அபிராமியம்பிகையின் தரிசனத்தைக் கனவில் கானும் பாக்கியம் தமக்குக் கிடைத்ததை எண்ணி எண்ணி உருகிஞர். தன் பக்தருடைய பெருமையை விளக்கவே அம்பிகை கனவில் தோன்றினுள் என்று முடிவு செய்தார்.

அடுத்த கணமே எழுந்து அபிராமிபட்டரைத் தேடிப் புறப்பட்டுவிட்டார். அவர் வீடு சென்ருர் அப்போதும் பட்டர் அபிராமியின் துதியாகப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். அங்கே சென்ற பின்னர் அரசர் அபிராமி பட்டரை வணங்கி எழுந்தார். அந்தாதியாகத் துதிகளைப் பாடிக்கொண்டிருந்த பேரன்பர் அப்போது 19-ஆவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/13&oldid=546170" இலிருந்து மீள்விக்கப்பட்டது