பக்கம்:எழில் உதயம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிராமி பட்டர் 7

பாடல்களில் மெய்ம்மறந்திருந்த மன்னர் பின்பு அபிராமிபட்டரை வணங்கிச் சில விளைநிலங்களை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினர். பட்டர் இணங்கவில்லை. 'தங்கள் வழியே வருகிறவர்களின் நன்மைக்காக எதையேனும் ஏற்றருள வேண்டும்' என்று மீண்டும் வேண்டினர். இறுதியில், சில கிராமங்களில் ஆண்டு ஒன்றுக்கு வேலிக்கு எட்டு நாழி நெல் அவருக்கும் அவர் சந்ததியாருக்கும் அளிக்கும்படி சுரோத்திரிய உரிமை அளித்துச் செம்பில் எழுதிக் கொடுத்தார் மன்னர்.

இன்னும் இந்த உரிமையை இவர் பரம்பரையினர் அநுபவித்து வருகின்றனர். திருச்சிராப்பள்ளியில் வயலின் வித்துவானக இருக்கும் பூரீ அமிர்த பாரதி என்பவர் அபிராமி பட்டரின் வழி வந்தவர். அவர் ஒவ்வோராண் டும் இந்த நெல்லைத் தொகுத்து அபிராமி சந்நிதியில் அபிஷேக ஆராதனை செய்வித்து அன்னதானம் செய்து வருகிரு.ர்.

அபிராமி பட்டர் பாடிய அபிராமியந்தாதி மிகச் சிறந்த நூல். பலர் இதைப் பாராயணம் செய்து நலம் பெற்றிருக்கிருர்கள். அன்போடு படிப்பவர் நெஞ்சில் அபிராமியின் திவ்வியத் திருவுருவம் தோற்றும்படியும், மேலும் மேலும் படிப்பவர்களுக்குப் பக்தி நலம் பழுக்கும் படியும் செய்வது இந்த நூல். அங்ங்ணம் செய்வதற்குரிய சொல் நடையும் பொருள் ஆற்றலும் இதில் நிரம்ப அமைந்து கிடக்கின்றன. உண்மையான ஞானம் பெற்று அதனல் வரும் ஆனந்தாதுபவத்தை உடையவர்க்கன்றி இத்தகைய பொருட் சிறப்புடைய வாக்கு அமைவது மிகவும் அருமை. பாடல்தோறும் ஆசிரியருடைய அநுபவ நிலை கொப்புளித்துக் குமிழியிட்டு மணக்கின்றது. அந்த மணத்தை நுகரவைத்த ஆசிரியர் அபிராமி சமயத்தை இதன் மூலமாக நமக்குக் காட்டுகிரு.ர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/15&oldid=546172" இலிருந்து மீள்விக்கப்பட்டது