பக்கம்:எழில் உதயம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 எழில் உதயம்

அப்படியின்றி, வேண்டியதை வேண்டியபடியே அடையச் செய்து இந்த வாழ்வில் நன்முக வாழவைக்கும். அவள் கருணை அறக்கருணை. அதைத்தான் இங்கே தண்ணளி என்ருர். மறக்கருணை கசப்பு மருந்தைப் போன்றது. இரண்டும் மருந்தானலும் முன்னேயது உண்ணும்போது துன்பமாக இருந்து பயனல் நலம் செய்வது. பின்னையது உண்ணும்போதும் இனிதாக இருந்து, பயனை விளைவிக்கும் போதும் இனிமையாகவே இருப்பது. அம்பிகையின் தண்ண வியாகிய அறக் கருணை இனிப்பு மருந்து போன்றது; தேனே மருந்தாளுல் எப்படியோ, அப்படி இருப்பது.

முற்பிறவிகளில் பல கோடி தவம் செய்தவர்கள் அவள் தண்ணளியைப் பெறுவார்கள். வேறு எதை எதையோ நாடித் தவம் புரிபவர்கள் இருக்கிருர்கள். தம்முடைய ஆசை நிறைவேற வேண்டுமென்று தவம் செய்தவர்கள் அசுரர் . களும் அரக்கர்களும். இராவணன், சூரன், இரணியன் ஆகியோர் மிகவும் கடுமையான தவத்தை இயற்றினவர்கள். அந்தத் தவத்தால் அவர்கள் பெரிய வலிமையைப் பெற்ருர்கள்; இன்னது வேண்டுமென்று ஆசைப்பட்டுப் பெற்ருர்கள்; அருள் வேண்டுமென்று கேட்கவில்லை. அவர் களால் உலகுக்குத் தீங்கு விளைந்தது. இறைவன் அவர்களே ஒறுக்கும்படி நேர்ந்தது. அத்தகைய தவம் நன்மையை உண்டாக்காது. அது அசுரத்தவம்,

நல்லவர்கள் இறைவியின் திருவருளுக்காக ஏங்கித் தவம் புரிவார்கள். பல காலம் பலகோடி தவம் செய்த வர்கள், அவள் செய்யும் தண்ணளியைப் பெறுவார்கள். அவளுடைய தண்ணிய அருளுக்காக முற்பிறவிகளில் பல கோடி தவஞ் செய்தவர்கள் அந்த அருளைப் பெற்றதனல் பெறும் பேற்றை இங்கே சொல்கிருர் அபிராமிபட்டர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/154&oldid=546310" இலிருந்து மீள்விக்கப்பட்டது