பக்கம்:எழில் உதயம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 எழில் உதயம்

அம்பிகையின் தண்ணளியைப் பெறுபவர்கள் இந்த உலகத்திலே நல்வாழ்வு பெறுவர் என்பதை முதலிற் கூறினர். அது நமக்குக் கைமேல் பலகை வருவது. பிறகு மற்றவற்றைக் கூறினர்.

தண் அளிக்கென்று முன்னே பல கோடி

தவங்கள் செய்வார்

மண் அளிக்கும் செல்வமோ பெறுவார் மதி

வானவர்தம்

விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி

விடும்அன்ருே?

திருவருளால் எங்கும் நல்வாழ்வு பெறலாம் என்பதை வற்புறுத்துவது நம்முடைய சமயம்.

"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலே'

என்று சம்பந்தரும்,

'இம்மை யேதரும் சோறும் கூறையும்

ஏத்தலாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்

கியாது மையுற வில்லையே'

என்று சுந்தரரும் அருளியிருக்கிருர்கள்.

米 # 琳

அம்பிகையின் தண்ணளியில்ை வரும் நலங்களைச் சொன்னவர், இந்தக் கருத்தை அபிராமியம்மையை விளித்தே சொன்னர். உன்னுடைய தண்ணளியால் வருவன இவை அன்ருே என்று வினவுவாரைப் போலச் சொன்னர். அம்பிகையை அவர் அன்போடு விளிக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/158&oldid=546314" இலிருந்து மீள்விக்கப்பட்டது