பக்கம்:எழில் உதயம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான கருணை 155

காட்சிப் பொருளுக்கும் மேலே மிக மிக நுட்பமான ஆகாசமாக விளங்குகிருள். தனக்கு என்று ஒர் உருவமும் நிறமும் எல்லையும் இல்லாமல் நிற்கும் வெளியாக நிற்கிருள். ஆகாசத்தில் பல வகை உண்டு. அத்தனையுமாக இலங்கு கிறவள் மகாமாதா. தஹராகாச ரூபிணி, பராகாசா என்ற திருநாமங்களைக் கொண்டு இதனை உணரலாம். ஆகவே,

எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே!

என்று அடுத்தபடி துதிக்கிரு.ர்.

பஞ்ச பூதங்களில் ஒன்று பூதாகாசம். பூதங்கள் தோன்றும்போது முதலில் ஆகாசம் தோன்றும். பின்பு வாயு தோன்று ; அப்பால் அக்கினியும், பிறகு நீரும், பிறகு மண்ணும் தோன்றும். இந்த ஐந்து பூதங்களுமாக விரிந்து நிற்கிறவள் அபிராமியே. ஞானம் இல்லாதவர் களுக்குப் பூதமைந்தும் விலங்கிய விகாரப் பாடாக இந்தப் பிரபஞ்சம் தோன்றிலுைம் மெய்ஞ்ஞானம் பெற்றவர் களுக்கு யாவும் பரம்பொருளாகத் தோன்றும். .

'ப ரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்'

என்பது திருமந்திரம். ஆகாசம் முதலிய பூதங்களாகப் படர்ந்து நிற்பவள் அம்பிகை என்பதை உணர்ந்தவர்கள் மெய்ப்பொருள் கண்டவர்கள்.

வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!

தோற்றும் முறையில் முன்னே வருவது ஆகாசம்: அது விரியும் முறை. ஒடுங்கும்போது ஆகாசம் கடைசியில் நிற்கும். ‘. . . *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/163&oldid=546319" இலிருந்து மீள்விக்கப்பட்டது