பக்கம்:எழில் உதயம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு 1.59

என்ன அதிசயமான வடிவு' என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தார்.

அதிசயமான வடிவு உடையாள்.

இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? அவர் தம் உள்ளத்தடத்திலே வைத்துத் தியானிக்கும் பெருமாட்டியின் பேரழகிலே சொக்கி நின்று தம்மை மறப்பவர். இப்போது மற்றவர்களுக்கு அந்த அழகைக் கொஞ்சம் சொல்லிப் பார்க்கலாம் என்று புகுந்தார். 'அதிசயமான உருவம் படைத்தவள்’ என்று பீடிகை போட்டுவிட்டார். இனி அதை விரித்துரைக்க வேண்டும். அங்க வருணனை செய்யலாமா என்று யோசித்தார். முதலில் எதைச் சொல்வது? முகத்தைத் தான் சொல்ல வேண்டுமென்று எண்ணினர். எப்படிச் சொல்வது?

உலகத்தில் அழகிய முகத்துக்கு உவமை சொல்வ தானுல் எல்லோருமே தாமரையைச் சொல்லுகிறர்கள். அந்த வாய்பாடு அவருக்கு நினைவு வந்தது. "சே! இந்தப் பழைய உவமையையா சொல்வது?’ என்ற எண்ணம் உடன் வந்தது. அப்படியானல் வேறு எதைச் சொல்வது?’’ எண்ணிப் பார்த்தார். ஒன்றுமே தோன்றவில்லை. உலகத்தி லுள்ள தாமரைகள் எல்லாம் சேர்ந்து நின்ருலும் அம்பிகையின் முகத் தாமரைக்கு ஒத்து வருமா? அம்பிகை யின் திருவுருவ வருணனை செய்யப் புகுந்ததே தவறு போலும் என்று எண்ணினர் பட்டர்.

தாமரை எங்கே? அம்பிகையின் திருமுக எழில் எங்கே? எத்தனை காலம் தவம் செய்தாலும் இந்த எழில் தாமரைக்கு வருமா?-இப்படி ஒடிய எண்ணத்தினுாடே ஒரு புதிய கருத்துத் தோன்றியது ஆசிரியருக்கு. உலகத்திலுள்ள தாமரைகள் யாவும் எம்பெருமாட்டியின் திருமுகமலரின் பேரழகைக் கண்டு துதிக்கின்றன என்று ஒரு கற்பனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/167&oldid=546323" இலிருந்து மீள்விக்கப்பட்டது