பக்கம்:எழில் உதயம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான வடிவு 163

அம்பிகையின் அதிசயமான வடிவழகுக்கு இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும்?

அதிசய மான வடிவுடை யாள்,அர விந்த்மெல்லாம் துதிசய ஆனன சுந்தர வல்லி, துணைஇரதி பதிசய மானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசயம் ஆகஅன் ருேவாம பாகத்தை வவ்வியதே? *வியக்கத்தக்க திருவுருவத்தை உடையவளாகிய அபி ராமி, தாமரைகளெல்லாம் துதிக்கும் வெற்றியுடைய திருமுகத்தையுடைய அழகுக் கொடி போன்றவள்; துணைவி யாகிய இரதியின் கணவனுகிய மன்மதன் பல இடங்களில் பெற்ற வெற்றியானது தோல்வியாகும்படியாக முன்பு நெற்றிக் கண்ணுல் பார்த்தவருடைய திருவுள்ளம் தனக்குரிய வெற்றியாக மாற, அதனால் அல்லவோ அப் பெருமாட்டி அவருடைய இடப்பாகத்தை மேற் கொண்டது?*

(பார்த்தவர் தம் மதியினிடம் சயமாவதற்காக அல்லவா வாமபாகத்தை வவ்வியது என்றும் கொள்ளலாம். - அதிசயம்-வியப்பு. துதி ஆண்னம், சய ஆனனம் என்று கூட்டுக. உவமைக்கு ஆற்ருமல் தாமரைகள் தோல்வியுற அவற்றை வென்ற வெற்றியையுடைய திருமுகம். சுந்தர வல்லி-அழகிய கொடி போன்றவள். துணை-மனைவி. இரதி பதி-காமன். சயமானது-முன்பெற்ற வெற்றி; ஆனது: எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. அபுசயம்-தோல்வி, முன் பெற்ற சயம் இப்போது அபசயமாக மாறியது. முன் பார்த்தவர்-முற்காலத்தில் நெற்றிக் கண்ணேத் திறந்து பார்த்த சிவபெருமான். மதி சயம் ஆக-திருவுள்ளம் தனக்கு வெற்றியால் பெற்ற பொருள் ஆகிவிட, சயம்-வென்ற பொருள்; ஆகு பெயர், வாமபாகம்-இடப்பாகம், வடிவுடையாள், சுந்தரவல்லி, மதிசயமாக, அதலைன்ருே வவ்வியது என்று கூட்டுக.)

அம்பிகை பேரழகுடையவள் என்பது கருத்து. அபிராமி என்ற திருநாமத்துக்கே பேரழகுடையவள் என்பது ஒரு பொருள்.

இது அபிராமி அந்தாதியில் 17-ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/171&oldid=546327" இலிருந்து மீள்விக்கப்பட்டது