பக்கம்:எழில் உதயம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரமர் மேனிக் கணபதி r 1登

'என் அன்னையை நீ பாடுவது ஏன்?’’ "அந்தப் பிராட்டி எனக்கும் அன்னை ’’

'உனக்கா'

"ஆம், எனக்கு மட்டும் அல்ல; உலகம் ஏழுக்கும். அவளே தாய். சொல்லமுடியாத சீனரப் பெற்ற அபிராமி உலகேழும் பெற்ற பெருமாட்டி.”

‘'நீ என்ன செய்யப் போகிரு ப்' 'அந்த அன்னையைப்பற்றி ஒர் அந்தாதி பாட வேண்டும்.” *

'அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிருய்?

தேவரீரே அதை நான் பாடும் வகையைக் கற்பித் தருளவேண்டும். இன்ன இன்னபடி பாடு என்று கட்டுரைத் தருள வேண்டும்.'

“நல்ல காரியம் செய்தாய்! இப்போது இந்த ஆனந்த நடனத்தை விட்டுவிட்டு உனக்குப் பள்ளிக்கூடம் போடச் சொல்கிருயா?” -

அகடித கடன சாமர்த்தியம் உடைய தேவரீருக்கு இது ஒரு பெரிய காரியமா? என் சிந்தையிலே தேவரீர், நின்றருளி எப்போதும் இந்த அந்தாதி மாலை இடை, விடாது பெருகும் வண்ணம் அதற்குரிய சொல்வளத் தையும், பொருள் வளத்தையும் பர்லித்தருளவேண்டும்:

நல்ல கவி பாடவேண்டுமானல், பேனவை எடுத்து உடனே எழுதிவிட முடியாது; அல்லது வாயைத் திறந்து வுடன் பேச்சு வருவதுபோலக் கவிதை வந்துவிடாது; முதலில் உள்ளத்திலே அது உருவாகவேண்டும். சித்தனகி செல்வம் பெருதவன் எந்தக் கலையிலும் வல்லவன: இருக்க முடியாது. சொல்லேருழவராகிய புலவர்களின், அகமாகிய வயலில் செய்யுள் விளையும். z · · · · .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/19&oldid=546176" இலிருந்து மீள்விக்கப்பட்டது