பக்கம்:எழில் உதயம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 எழில் உதயம்

அமைத்தார்கள். அவற்றில் ஒன்பது மலைமேல் இருந்தன. ஏழு கடல்களில் இருந்தன. அந்த ஒன்பது மலைகளின்மேல் வாழ்பவளாதலின் மலையாள் என்னும் பெயருடையவள் என்றும் கொள்ளலாம்.

மேரு, மலயாசலமாகிய பொதியில், விந்தமலை ஆகிய மலைகளில் அம்பிகை திருக்கோயில் கொண்டிருக்கிருள். அதளுல் ஸாமேருமத்யச்ருங்கஸ்த்தா, மேருகிலயா, விந்த்யாசல கிவாலினி, மல்யாசல் வாஸினி என்ற திருநாமங்கள் அம்மைக்கு உண்டாயின.

குழந்தையாக நின்று பார்க்கும் ஆசிரியர் கண்ணுல் பார்க்கிருர், உடனே கருத்தால் எதையோ நினைக்கிருர், முலையாள் என்று உருவத்தை எண்ணியவர் மலையாள் என்று மலைமீது கருத்தைச் செலுத்தினர். மறுபடியும் திருவுருவத்தில் கண்ணேச் செலுத்தினர். இப்போது அம்மை யின் திருக்கரங்களே அவர் தியானித்தார். அவள் கையில் வளைகளை அணிந்திருக்கிருள். அவை துவளத் துவள அசை கின்றன. சங்கினல் ஆன அந்த வளைகளில் பல நிற மணி களைப் பதித்து அழகு செய்திருக்கிருர்கள். அதனல் பல வண்ணங்களை வீசுகின்றன.

வருணச் சங்கு அலே செங்கை.

இப்படி உள்ள பெருமாட்டி மிகவும் நுட்பமான கலை களின் உருவமாகவும் இருக்கிருள். அவள் சகல கலைகளை யும் தன் கலாபமாகத் தாங்கும் மயில் போல உலவுகிருள்.

சகல கலா மயில்.

கலை அவள் உருவம்; கலைகள் அவளால் 'உண்டாக்கப் படுகின்றன; கலைகளையே அவள் தன் உரையாடலாகக் கொண்டிருக்கிருள். அவள் சகலகலாவல்லியாக விளங்கு கிருள், சதுஷ்ஷஷ்டி கலாமயி, கலாவதி, கலாலாபா, கலாத்மிகா, கலாாதா, கலாநிதி, காவ்யகலா என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/198&oldid=546353" இலிருந்து மீள்விக்கப்பட்டது