பக்கம்:எழில் உதயம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம் 197

இளவஞ்சிக் கொம்பே!

என்ருர். கொடியின் ஒரு கிளையையும் கொம்பு என்று சொல்லலாம். திருவாசகத்தில்,

' கொடுங்கரிக் குன்றுரித் தஞ்சுவித் தாய்வஞ்சிக் கொம்பினையே’

என்று அம்பிகையை வஞ்சிக்கொம்பு என்று மாணிக்க வாசகர் கூறியிருக்கிருர், வஞ்சி யென்பது ஒரு மரத்துக் கும் பெயர். ஆதலின் அம்மரத்தில் பூவுடன் விளங்கும் கொம்பு போன்றவளே என்றும் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு மென்மை மிக்கவளாக இருக்கும் அம்பிகை தன் பெருங்கருணையினல் அடியவர்களை ஆண்டு கொள் கிருள். பக்தர்களும் ஞானிகளும் பக்குவத்தினல் உயர்ந்து அவளுடைய பேரருளைப் பெறுகிருர்கள். ஆயினும் அவர் களைக் கேட்டால், 'எனக்கு என்ன தகுதியிருக்கிறது? அம்பிகை தன் பெருங் கருனேயிஞல், ஒன்றுக்கும் பற்ருத அடியேனையும் ஆண்டு கொண்டாள்” எள்று கூறு வார்கள்.

"யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்கும் கீழாம் அடியேனே-யாவரும் பெற்றறியா இன்பத்துள்வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை'

என்று மாணிக்கவாசகர் கூறுவதைக் காண்க,

இந்தக் குரலிலே அபிராமி பட்டர் பாடுகிரு.ர். 'பக்குவம் இல்லாத எனக்கு அருள் செய்தாள் எம்பெரு

மாட்டி. கனிமரம் பழுக்க வேண்டுமானல் அதற்குரிய காலம் உண்டு. பருவத்தால் அன்றிப் பழுப்பதில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/205&oldid=546360" இலிருந்து மீள்விக்கப்பட்டது