பக்கம்:எழில் உதயம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம் 199

'உம்பர்கட் கரசே, ஒழிவற நிறைந்த யோகமே, ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு

வாழ்வற வாழ்வித்த மருந்தே" என்பது திருவாசகம்.

பழுத்தபடியே-பழுத்த கனியின் உருவமே என்று

பொருள் கொள்வது சிறப்பு.

கொடியே, இளவஞ்சிக் கொம்பே,

எனக்கு வம்பே பழுத்த படியே?

கொடி, கொம்பு, பழுத்த படி என்றெல்லாம் சொன்னவருக்கு மலரும் மணமும் நினைவுக்கு வந்தன. அம்பிகையை மணமாகச் சொன்னல் அதனைத் தாங்கும் மலர் எது? அவள் வேதத்தின் உட்பொருளாக இருக்கிறவள்; ஆதலின் வேதம் என்னும் மலரின் பரிமளமாக இருப்பதாகச் சொல்லலாம் அல்லவா?

மறையின் பரிமளமே!

இவ்வாறு விளங்கும் இறைவி தன் கருணையினல் எத்தனையோ திருவிளையாடல்களைப் புரிகிருள்; பல திருவ வதாரங்களை எடுக்கிருள். அப்படி எடுத்த அவதாரங் களுக்குள் மிகச் சிறந்தது பார்வதியாக எழுந்தருளிய திருக் கோலம். இமராஜன் புதல்வியாக வந்து வளர்ந்து சிவபெரும்ானத் திருமணம் செய்துகொண்டாள். அதனல் ஹைமவதி, கிரிஜா, பர்வத வர்த்தனி, பார்வதி, மலைமகள் என்ற திருநாமங்கள் அப்பெருமாட்டிக்கு அமைந்தன.

மிக்க பனி அடர்ந்த பெரிய மலை இமாசலம். அதனல் அதனைப் பணிமால் இமயம்’ என்று சொல்கிருர் ஆசிரியர். அந்த மலையில் பெண் யானையைப்போல உலாவி வளர்ந் தாள் அம்பிகை. ஆதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/207&oldid=546362" இலிருந்து மீள்விக்கப்பட்டது