பக்கம்:எழில் உதயம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம் 201

இதுகாறும் அம்பிகையின் பலவகைப் புகழ்களைக் கூறி மகிழ்ந்த ஆசிரியர், இப்போது அவளுடைய திருமுன் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வருகிருர். அவர் வேண்டிக் கொள்வது உலகியற் பொருளே அன்று.

‘'வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை”

என்று வள்ளுவர் கூறுவார். அந்தப் பிறவாமையை அருளும் படி அபிராமியம்மையிடம் விண்ணப்பித்துக் கொள்கிரு.ர்.

பிறவியே பல துன்பங்களுக்குக் காரணமாவது. பிறவி அற்றுவிட்டால் என்றும் மாருத பேரின்ப வாழ்வை எய்த லாம். இப்போது பிறந்து விட்டபடியால் இறப்பினின்றும் உய்ய இயலாது. ஆனல் இறைவியின் திருவருளைப் பெற்று விட்டால், இந்தச் சரீரத்தை உதறிய பிறகு, இனி இங்கே வந்து பிறவாத நிலை வரும். வினை காரணமாகவே பிறவி வருகிறது. இறைவியின் திருவருளால் வினையற்று விடின் உடனே பிறவாத நிலையாகிய முக்தி கிடைத்து விடும். அத்தகைய நிலை தமக்கு வேண்டுமென்று கேட்கிருர் ஆசிரியர்,

அடியேன் இறந்து இங்கு இனிப்

பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே!

“நின் அடியையே பற்றுக் கோடாகக் கொண்டவன் ஆதலால், எனக்கு வேண்டியதை யாரிடம் சொல்வது? உன்னிடமே விண்ணப்பித்துக் கொள்கிறேன். இப்போது பிறந்துவிட்டேன். இந்த உடம்டை எப்படியும் விட்டுச் செல்ல வேண்டியதுதான். அப்படி இறந்து விட்டால் மீண்டும் இவ்வுலகில் வந்து பிறக்கக்கூடாது. அந்த நிலை வர வேண்டுமானல் என்னுடைய முயற்சி பயன்படாது. நீ எளியேனிடத்தில் கருணை பூண்டு நீயே என்னிடம் வந்து என்னை ஆளாகக் கொண்டு தலம் புரிய வேண்டும். நீ ஆண்டு கொள்ளா விட்டால் எமனுடைய வாதனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/209&oldid=546364" இலிருந்து மீள்விக்கப்பட்டது