பக்கம்:எழில் உதயம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு 209

களினூடும் அந்தர்யாமியாய் இருக்கிருள். இந்த உலகத் தைக் கடந்து, மனித மனம் எட்டாத இடத்திலும் இருக் கிருள். எல்லாப் பொருளினுாடும் அடங்கி உள்ளே இருக் கிருள்; எல்லாப் பொருளையும் தனக்குள்ளே அடக்கி அவற்றிற்கு அப்பாலும் இருக்கிருள்.

வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே!

பக்தர்களின் சிறிய உள்ளத்தில் பெட்டியில் அடங்கும் மாணிக் கம்போல நின்று ஒளி விடுகிருள் அம்பிகை. ஆளுல் அந்த அளவில் நின்று விடுகிறவளா அவள்? அவள் எங்கும் நிறைந்திருப்பவள். விரிந்த மூவுலகுக்கும் உள்ளே, அந்த உலகங்களிலுள்ள உயிர்க் கூட்டத்தின் உள்ளே அந்தர்யாமி யாய் நிலவுகிருள். இந்தப் பிரபஞ்சத்துக்கு அப்பால், எல்லாப் பொருளுக்கும் புறம்பேயும் இருக்கிருள்.

'இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கிய

வேத முதல்வன்'

என்று கற்றிணையில் வருகிறது. அம்பிகை உள்ளும் இருக் கிருள்; புறம்பும் இருக்கிருள்.

கடவுள் என்ற சொல்லே இந்த இரண்டு தன்மைகளை யும் சுட்டும் பொருளே உடையதாக அமைந்திருக்கிறது. எல்லாப் பொருளேயும் கடந்து, எல்லாப் பொருளுக்கு உள்ளும் நிற்பவன் எவனே அவனே கடவுள். அம்பிகை அப்படி இருக்கிருள். .

இவ்வாறு சர்வாந்தர்யாமியாய், சர்வத்தையும் தன்னுள் வியாப்பியமாக்கிய வியாபக வஸ்துவாய் இருக்கும் அவள் கருணையினல் உள்ளம் கொள்ளும்படி ஒரு கோலம் கொண்டு வந்தாள். எங்கும் பரந்து வீசுகிற காற்று ஒரு நுழைவாயில் வழியே புகுந்து வேகமாக வீசுவதுபோல, விபுவாக இருக்கும் அன்னே திருக்கோலம் கொண்டு

எழில்-14 - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/217&oldid=546372" இலிருந்து மீள்விக்கப்பட்டது