பக்கம்:எழில் உதயம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 எழில் உதயம்

பொருள்களை அம்பிகைக்கு உவமையாக்கிச் சொல்ல முந்துகிருர்.

மணிகள் ஒன்பதானுலும் அவற்றுள் நாயகமாக நிற்பது மாணிக்கம். ஒன்பது கிரகங்களுள் சூரியன் சிறந்து நிற்பதுபோல, அந்த மணிகளுள் செம்மணியே சிறந்து நிற்கும். அம்பிகை செக்கச் செவேலென்ற வண்ணம் உடையவள். அந்த வண்ணத்துரடே ஒளியும் இணைந்து நிற்கும். அந்தத் திருக்கோலத்தை உன்னும் போது அபிராமிபட்டருக்கு மாணிக்கம் நினைவுக்கு வருகிறது.

மணியே!

மணிக்குப் பெருமை அதன் நிறத்தினுல் மட்டும் அமைவது அன்று. ஒளியில்ை சிறப்பு எய்துவது மணி. மணியும் ஒளியும்போல என்பது பழமொழி. முதலில் மணியைச் சொன்னவர் அதற்குச் சிறப்புத் தருகின்ற ஒளியையும் நினைத்தார். பெருமாட்டி தான் இணைந் திருக்கும் இடங்களில் எல்லாம் அழகையும் ஒளியையும் உண்டாக்குகிறவள்.

ஒரு வகையில் சிவபெருமானையும் மணி என்று சொல்லலாம். அவனும் செம்மேனி உடைய பெருமான் தான். -

"சிவனெனும் நாமம் தனக்கே உடைய

செம்மேனி எம்மான்' என்பது தேவாரம். சிவபெருமானிடத்தில் உயிராக நின்று நலம் செய்கிறவள் அன்ன. அவன் மாணிக்க மானல், அவனோடு ஒன்றி நின்று சக்தியைப் பெறச் செய்யும் அன்னை அந்த மணியின் ஒளியாகும். எனவே அன்னையை மாத்திரம் எண்ணி, மணியே’ என்று சொல்லப் புகுந்தவர் அம்மையையும் அப்பனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/222&oldid=546377" இலிருந்து மீள்விக்கப்பட்டது