பக்கம்:எழில் உதயம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல் 215

மணியின் ஒளியே!

என்ருர். பூவில் மணம் போலவும், நீரில் தண்மை போல வும், அனலில் வெம்மை போலவும், மணியில் ஒளி போலவும் சிவபெருமானிடம் நின்று நிலவுகிறவள் அனன.

நவமன்னிகள் தனித்தனியே இருந்தால் அத்துணைச் சிறப்பு உண்டாகாது. பல வகையில் இணைந்து அணிக ளாக நிற்குமானல் அவற்றின் அழகும் பயனும் மிகுதி யாகும். தனி முத்தைவிட முத்துமாலை சிறந்தது; அணிவ தற்குரியது. தனியாக இருக்கும்போது வெறும் மணி என்று சொல்லும் அளவில் அது அமையும். பிற மணி களோடு சேர்ந்து பொன்னும் கலந்து அணியாகும்போது சிறந்த பயனை அடைகிறது. பூவைத் தனியே அணிவதை விட மாலையாக்கி அணிவது சிறப்பாதல்போல, மணியையும் அணியாக்கிப் புனைதல் சிறப்பு. எம்பெருமாட்டி பல பல நலங்களெல்லாம் இணைந்த திருவுருவம், உடையவள், காண வும் பேசவும் நினைக்கவும் உரிய இனிய பண்புகள் அவள் பால் உண்டு. பல மணிகளை ஒன்ருக்கி இணைத்து அணியாக அமைத்தால் எத்தனை பயனும் பெருமையும் உண் டாகுமோ, அத்தனை பயனும் பெருமையும் அம்பிகை யால் உண்டாகின்றன. ஒவ்வொரு தெய்வத்தினிடம் ஒவ்வொரு மணியைப் போல ஒவ்வொரு பண்பு சிறந்து நிற்கும். எம்பெருமாட்டியிடம் பல மணிகள் ஒன்றுபட்ட அணியைப் போலே எல்லாக் குணங்களும் மிளிர்ந்து விளங்கும். ஆதலின், மணி என்றும் மணியின் ஒளி என்றும் புகழ்ந்தவர், - .

ஒளிரும் மணி புனைந்த அணியே!

என்ருர், -

அணியைச் சொன்னவுடன் எம்பெருமாட்டி பலவகை, ஆபரணங்கள் புனைந்திருத்தல் நினைவுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/223&oldid=546378" இலிருந்து மீள்விக்கப்பட்டது