பக்கம்:எழில் உதயம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல் 221

மகிழ்ந்த ஆசிரியர், பின்பு அமரருக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பையும் கூறி, இறுதியில் தம்முடைய உறுதிப் பாட்டைச் சொல்ல வருகிருர். மணியாகவும் ஒளியாகவும் அணியாகவும் அழகாகவும் பிணியாகவும் மருந்தாகவும்: விருந்தாகவும் நிற்கும் அபிராமி பக்தர்களின் புகலிடமாக நிற்பவள். அவளே அறிந்துகொள்ளாத வரையில் நமக்குப் புகலிடம் எங்கே என்ற ஐயமும் அச்சமும் மக்களுக்கு நேரும். பெரும் கூட்டத்தில் ஒளி மங்கிய மாலை நேரத்தில் அன்னையைப் பிரிந்த குழந்தை மாதர்களில் ஒவ்வொரு வராக அணுகி முகத்தைப் பார்த்து ஏமாந்துபோவது போல, மக்களும் தெளிவில்லாத மாயை காரணமாக யாரைப் புகல் புகுவது என்று அறியாமல் உழலுகிருர்கள். காணலை நீர் என்று எண்ணிக் கடுவெளி திரியும் மான் எத்தனை நேரம் நாடி ஒடித் தேடினுலும் நீரை அடையாது. முயற்சி மிக மிக நீரைக் காணுத ஏமாற்றமும் அயர்ச்சியும் உண்டாகின்றன. அப்படி இன்றி, நீர் நிலையைக் கண்டு. விட்டாலோ வேறு எதனிலும் நாட்டம் இன்றி அங்கேயே நின்று விடும். அதுபோலப் பிரபஞ்ச வாசனையில் ஈடுபட்ட உயிர்கள் யார் யாரையோ அணுகி அவர்களால் மேலும் மேலும் துன்பம் உண்டாவதையே காண்கின்றன. அம்பிகை ஒருத்திதான் தக்க பற்றுக்கோடு என்பதை, உணர்ந்து அந்தப் பெருமாட்டியின் திருவடித் தாமரையைப் பற்றிக்கொண்டால், அப்பால் வேறு ஒருவரையும் நாடிச் செல்லும் அவசியம் இராது.

வறுமையால் துன்புற்றவர்கள் தமக்குப் பொருள் உதவும் வள்ளல்க்ள் எங்கே என்று தேடுவார்கள். அவர்கள் தேடி வந்தால் அவர்களது குறிப்பறிந்து வரையறையின்றித் தருவது வள்ளன்மை, திருவள்ளுவர். . . . "இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/229&oldid=546384" இலிருந்து மீள்விக்கப்பட்டது